ADDED : டிச 27, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் பேக்கரி நிறுவனம் சார்பில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, சிறுவர்களுக்கான கேக் தயாரிக்கும் போட்டி நடந்-தது.
இதில், 6 முதல், 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு வண்ணமிகு, சுவையான கேக் வகைகளை தயாரித்தனர். வெண்ணிலா, ஸ்ட்ராபெரி, சாக்லேட், பிஸ்தா உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கேக் வகைகளை சிறுவர்கள் தயாரித்தனர்.கேக் தயாரிப்பதற்காக தேவையான கூடுதல் உணவு பொருட்களான க்ரீம், மில்க் மேட், வேப்பர்ஸ், சாக்கோ சிப்ஸ் போன்றவற்றை நிறு-வனமே வழங்கியது. விடுமுறை நாட்களில் இது போன்ற போட்டிகள் நடத்துவதால், தங்களுக்கு உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற சிறுவர், சிறுமியர் தெரிவித்தனர்.

