/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பட்டா மாற்ற ரூ.12,000 கேட்ட லஞ்ச சர்வேயருக்கு 'கம்பி'
/
பட்டா மாற்ற ரூ.12,000 கேட்ட லஞ்ச சர்வேயருக்கு 'கம்பி'
பட்டா மாற்ற ரூ.12,000 கேட்ட லஞ்ச சர்வேயருக்கு 'கம்பி'
பட்டா மாற்ற ரூ.12,000 கேட்ட லஞ்ச சர்வேயருக்கு 'கம்பி'
ADDED : ஜூலை 12, 2025 01:51 AM

பாப்பிரெட்டிப்பட்டி:பட்டா மாற்றம் செய்ய, 10,000 ரூபாய் லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கடத்துார் அடுத்த மணியம்பாடி, ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா, 33; விவசாயி. இவர், தன் தந்தை பெயரில் உள்ள விவசாய நிலத்தை, தன் பெயர், சகோதரிகள் பெயரில், சார் - பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்துள்ளார்.
தனி பட்டா வேண்டி, இணையதளம் மூலமாக இளையராஜா பாப்பிரெட்டிப்பட்டி நில அளவை துறைக்கு விண்ணப்பம் செய்தார். அவரை தொடர்பு கொண்ட மணியம்பாடி வருவாய் கிராம சர்வேயர் விஜயகுமார், 28, என்பவர், 12,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இளையராஜா, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். போலீசார், 10,000 ரூபாயை இளையராஜாவிடம் கொடுத்தனர். மணியம்பாடி அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சர்வேயர் விஜயகுமாரிடம் அவர் பணத்தை கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விஜயகுமாரை கைது செய்தனர்.