ADDED : அக் 21, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த ராஜகொல்-லஹள்ளியை சேர்ந்தவர் சரோஜா, 55. கடந்த, 18 அன்று இரவு, 7:00 மணிக்கு வீட்டின் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, அவரது வலது காலில் பாம்பு கடித்தது. உடனடியாக, அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு, 19 அன்று மதியம், 2.25 மணிக்கு இறந்தார். இண்டூர் போலீசார் விசாரிக்-கின்றனர்.