நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் மோதி பெண் பலி
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 6---
பாப்பிரெட்டிப்பட்டி
அடுத்த, அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தி, 52,
கூலி தொழிலாளி. இவர், தோழனுார் பிரிவு ரோட்டில் வசித்து வந்தார். நேற்று
முன்தினம் இரவு, 8:00 மணியளவில் வீட்டில் இருந்து அம்மாபாளையத்தில்
உள்ள கடைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வருவதற்கு கோபாலபுரம்
--ஏ.பள்ளிப்பட்டி சாலையில் நடந்து வந்தார். அப்போது, பின்னால் பஜாஜ்
பிளாட்டினா பைக்கில் வந்தவர், மோதியதில் சாந்தி பலத்த காயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.