/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் தர்ணா
/
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் தர்ணா
ADDED : ஜூலை 04, 2025 01:32 AM
தர்மபுரி, தர்மபுரி, மாட்லாம்பட்டி அருகே, பெரியபுதுாரை சேர்ந்தவர் அனிதாதேவி, 28. எம்.காம்., பட்டதாரி. இவர், தன்னை காதலித்து ஏமாற்றிய காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.
இது குறித்து, அப்பெண் கூறியதாவது:மாரவாடி அருகே, காமராஜ் நகரை சேர்ந்த நவீன்குமார் என்பவரை கடந்த, ஓராண்டாக காதலித்து வந்தேன். அவர் கடந்த, 3 மாதமாக என்னிடம் பேசுவதை தவிர்த்தார். அவரை சந்தித்து, என்னை திருமணம் செய்து கொள்ள கேட்டபோது, அவர் மறுத்து விட்டார். இது குறித்து, பாலக்கோடு மகளிர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என்னை காதலித்து ஏமாற்றிய காதலனை என்னுடன் சேர்த்து வைக்காவிடில், பூச்சி மருந்து குடித்து, தற்கொலை செய்து கொள்ள வந்தேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அப்போது, அங்கிருந்த பெண் போலீசார் அனிதாதேவியை மீட்டு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர், தர்ணாவை கைவிட்டு சென்றார்.