/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆட்டோ மோதிய விபத்து மகளிர் விடுதி வார்டன் பலி
/
ஆட்டோ மோதிய விபத்து மகளிர் விடுதி வார்டன் பலி
ADDED : டிச 03, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி அருகே, ஆதிதிராவிடர் மகளிர் விடுதி உள்ளது. இதில்,
வார்டனாக கனிமொழி, 55, என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த, 30 அன்று மாலை, 6:00
மணிக்கு விடுதி அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த ஆட்டோ மோதியதில்
படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இரவு, 9:30 மணிக்கு இறந்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.