/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., கூட்டணிக்கு பெண்கள் ஓட்டு மிக முக்கியம்; எம்.எல்.ஏ., பிரசாரம்
/
தி.மு.க., கூட்டணிக்கு பெண்கள் ஓட்டு மிக முக்கியம்; எம்.எல்.ஏ., பிரசாரம்
தி.மு.க., கூட்டணிக்கு பெண்கள் ஓட்டு மிக முக்கியம்; எம்.எல்.ஏ., பிரசாரம்
தி.மு.க., கூட்டணிக்கு பெண்கள் ஓட்டு மிக முக்கியம்; எம்.எல்.ஏ., பிரசாரம்
ADDED : ஏப் 08, 2024 07:20 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, தி.மு.க., கூட்டணியின், காங்., வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து, செல்லகுட்டப்பட்டி, மருதேரி, விளங்காமுடி, மகாதேவகொல்லஹள்ளி, வீராமலை, குள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பிரசாரம் செய்து பேசியதாவது:
கடந்த, 3 ஆண்டு, தி.மு.க., ஆட்சியில், இந்தியாவே திரும்பி பார்க்க வைக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை திட்டங்களை பார்த்து மற்ற மாநிலங்கள், தமிழகத்தை பின்பற்றுகின்றன. பள்ளி மாணவியருக்கு உதவித்தொகை, கல்லுாரி மாணவியருக்கு புதுமை பெண் திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளிட்ட திட்டங்கள் மகளிரை கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் உயர வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள். எனவே பெண்கள் ஓட்டு, தி.மு.க., கூட்டணிக்கு மிக முக்கியம். பெட்ரோல், டீசல், காஸ் விலை குறைய, ஏழை பெண்கள், ஆண்டிற்கு ஒரு லட்சம் பெற, கிருஷ்ணகிரி தொகுதியில், நம் வேட்பாளர் கோபிநாத்திற்கு கை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், தேர்தல் தொகுதி பொறுப்பாளர் இளங்கோவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

