/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.1.60 கோடியில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி
/
ரூ.1.60 கோடியில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி
ADDED : ஜூன் 12, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு,  தமிழக துணை முதல்வர் உதயநிதி, நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு டவுன் பஞ்.,க்கு உட்பட்ட தக்காளி மண்டி அருகில், மூலதன மானிய திட்டத்தில்,  1.60 கோடி  ரூபாய் மதிப்பில்,  புதிய அறிவுசார் மையம் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து பாலக்கோடு தக்காளி சந்தை அருகே  அறிவுசார் மைய கட்டடம் கட்டுவதற்கான பணியை டவுன் பஞ்., தலைவர் முரளி, செயல் அலுவலர் இந்துமதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள்,   துாய்மை பணியாளர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

