தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


ADDED : டிச 04, 2025 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2025 07:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதியமான்கோட்டை,தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலை, 52. இவர் தடங்கம் அடுத்த இந்திரா நகரில் இயங்கி வந்த தனியார் பேப்பர் கம்பெனியில் கடந்த, 3 ஆண்டாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், பேப்பர் கம்பெனியை ஏற்கனவே இயங்கி வந்த இடத்தின் அருகிலுள்ள தாளப்பள்ளத்திற்கு இடமாற்றம் செய்தனர். நேற்று காலை, 8:30 மணிக்கு துவக்க விழா பூஜை நடந்தது. இதில், பாஞ்சாலை, மின் ஸ்விட்ச் பாக்ஸ்சிற்கு பூ வைத்தபோது, அவரை மின்சாரம் தாக்கியது. இதில், மயங்கி விழுந்தவரை சக தொழிலாளர்கள் மீட்டு, ஒட்டப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாஞ்சாலை இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us