/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
/
மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
ADDED : அக் 14, 2024 06:27 AM
தர்மபுரி: மத்திய பிரதேச மாநிலம் கல்யாண்புரா தாலுகா, கிராம்கே-டாவை சேர்ந்தவர் சாபர்மைடா, 38. இவர் தர்மபுரி மாவட்-டத்தில், கோவை முதல் கர்நாடக மாநிலம் வரையிலான, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பைப் லைன் அமைக்க, அல்முசர் பெட்ரோலியம் கம்பெனியின் மூலம், பைப் லைன் பதிக்கும் கூலி வேலைக்கு கடந்த, 3 மாதத்திற்கு முன் வந்தார்.
நேற்று முன் தினம் மாலை, 5:30 மணிக்கு, சேலம் - கிருஷ்ண-கிரி தேசிய நெடுஞ்சாலையில் நல்லம்பள்ளி அருகே சாலையோ-ரத்தில், 10 அடி ஆழ பள்ளத்தில் துளையிடும் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது, பக்கவாட்டில் இருந்த மண் சரிந்து விழுந்து அவரை மூடியதில் இறந்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.