ADDED : ஜன 29, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், பைசுஹள்ளி அடுத்த, சின்னபுதுாரை சேர்ந்த தொழிலாளி லோகேஷ்குமார், 35. இவர் நேற்று மாலை, 3:00 மணிக்கு அவருடைய பஜாஜ் பிளாட்டினா பைக்கில் கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலத்தில் இருந்து, தர்மபுரி நோக்கி சென்றார்.
அப்போது, அவ்வழியாக வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.