ADDED : மே 23, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையை சேர்ந்தவர் பெருமாள், 60. கூலித்தொழிலாளி. கடந்த, 20ல், முண்டாசு புறவடையில் உள்ள ஒரு தோட்டத்திற்கு மருந்து அடிக்கும் வேலைக்கு சென்றார். பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
இரவு, 7:30 மணியளவில் முண்டாசுபுறவடை அருகே சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ஹூண்டாய் ஐ 20 கார் மோதி சென்றதில் பலியானார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்