ADDED : ஆக 31, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி
அடுத்த கல்லாத்துகாடு பகுதியை சேர்ந்தவர் சாக்கன், 60.
கூலித்தொழிலாளி.
இவர் சொந்த வேலையாக கடந்த, 24ல் கவுண்டம்பட்டிக்கு
சென்றார். பின் மீண்டும் அவர் கல்லாத்துகாடு செல்ல அவரது, டி.வி.எஸ்.,
எக்ஸ்.எல்., ஹெவி டூட்டி மொபட்டில் சேலம் - அரூர் மெயின் ரோட்டில்
சென்றார். அன்று மாலை, 6:00 மணிக்கு இருளப்பட்டி பிரிவு ரோட்டில்,
அரூரில் இருந்து, சேலம் நோக்கி வந்த ஹூண்டாய் கார் மொபட் மீது மோதியது.
இதில்
சாக்கன் பலத்த காயமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு
உயிரிழந்தார். புகாரின் படி, அ.பள்ளிப்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.

