/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு
/
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு
ADDED : நவ 05, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணற்றில் தவறி விழுந்த
தொழிலாளி உயிருடன் மீட்பு
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 5---
பொம்மிடி அடுத்த புது ஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன், 35. இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது, விவசாய கிணற்றில் கோழி ஒன்று இறந்து கிடந்தது. நேற்று காலை அதை எடுக்க, கயிறு கட்டி கிணற்றில் இறங்கினார். பின் கயிறு மூலம் மேலே ஏறியவர், தவறி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடினார். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பூபதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து, 85 அடி ஆழ கிணற்றில் இறங்கி, நீரில் தத்தளித்த வேல்முருகனை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.