/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ADDED : அக் 25, 2025 01:13 AM
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 300 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று காலை சர்க்கரை ஆலைக்கு பணிக்கு சென்ற தொழிலாளர்கள், திடீரென வேலையை புறக்கணித்து ஆலை வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர். நிர்வாக குறைபாடுகள், கோரிக்கைகளை வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கறுப்பு பட்டையணிந்து நுழைவாயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்க்கரை ஆலை செயலாட்சியர் ரவி, தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கைகளை தமிழக அரசிடம் தெரிவித்து, நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு
சென்றனர்.