/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் இன்று பா.ம.க., பொதுக்குழு: ராமதாஸ் பங்கேற்பு
/
தர்மபுரியில் இன்று பா.ம.க., பொதுக்குழு: ராமதாஸ் பங்கேற்பு
தர்மபுரியில் இன்று பா.ம.க., பொதுக்குழு: ராமதாஸ் பங்கேற்பு
தர்மபுரியில் இன்று பா.ம.க., பொதுக்குழு: ராமதாஸ் பங்கேற்பு
ADDED : அக் 25, 2025 01:13 AM
தர்மபுரி, தர்மபுரியில் இன்று நடக்கும், பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்கிறார்.பென்னாகரம் பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தர்மபுரி டவுன் செங்குந்தர் திருமண மண்டபத்தில் இன்று (அக்.,25) காலை ௧௦:௦௦ மணிக்கு நடக்கும் பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசுகிறார். அதை தொடர்ந்து, பா.ம.க., இளைஞர் சங்க தலைவரை, நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இதில், வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பா.ம.க., நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீ காந்தி, பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் மன்சூர் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர். இதில் பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.