/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர மணல் மூட்டைகள் அடுக்கும் பணியாளர்கள்

ADDED : டிச 12, 2024 01:23 AM
அரூர், டிச. 12-
அரூர், பெரிய ஏரி, 160 ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த ஏரி நிரம்புவதன் மூலம், அரூர் நகரில், குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். மேலும், எச்.தொட்டம்பட்டி, பச்சினாம்பட்டி, நாச்சினாம்பட்டி, நம்பிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. இந்த ஏரிக்கு தேவையான நீர், வாணியாறு அணையிலிருந்து வருகிறது.
சமீபத்தில் பெஞ்சல், புயல் காரணமாக பெய்த கனமழையால் வாணியாறு அணையில் இருந்து, திறந்து விடப்பட்ட உபரி நீரால், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி, தென்கரைகோட்டை ஆகிய ஏரிகள் நிரம்பி விட்டன. கடந்த சில நாட்களாக தென்கரைகோட்டை ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கொளகம்பட்டியில் கல்லாற்றின் குறுக்கே, கட்டப்பட்டுள்ள காரை ஒட்டு தடுப்பணைக்கு வருகிறது.
இந்நிலையில், காரை ஒட்டு தடுப்பணை சுவரின் உயரம் மிகவும் தாழ்வாக உள்ளதால், அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலையுள்ளது. மேலும், அரூர் பெரிய ஏரிக்கு கால்வாயில் தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று அரூர் டவுன் பஞ்., பணியாளர்கள் மூலம், மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்தது. இதனால், அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லும்.