/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உலக கழிப்பறை தினம் அ.தி.மு.க., விழிப்புணர்வு
/
உலக கழிப்பறை தினம் அ.தி.மு.க., விழிப்புணர்வு
ADDED : நவ 20, 2025 01:41 AM
தர்மபுரி, உலக கழிப்பறை தினத்தையொட்டி, அ.தி.மு.க., மருத்துவ அணி சார்பில், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் அசோகன், தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஒவ்வோர் ஆண்டும் நவ., 19- உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதில், கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பது, துாய்மையான கழிப்பறைகள் இல்லாததால், மலம் கழிப்பதை தவிர்ப்பது அல்லது தள்ளிப்போடுவது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்னையை பலரும் எதிர்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மலச்சிக்கல் ஏற்படுத்தும் காரணிகள் அதனால், ஏற்படும் சுகாதார பிரச்னைகள் குறித்து, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் அ.தி.மு.க., மருத்துவர் அணி மாநில இணை செயலாளர் அசோகன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது அவர், கிராம பகுதி மக்கள் கட்டாயம் வீடுகளில் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து, இல்லந்தோறும் தனிநபர் கழிப்பறைகள் கட்டி கொடுக்கபட்டது.
அதை துாய்மையான முறையில், சுகாதாரத்துடன் பயன்படுத்தி, நோய் தொற்று மற்றும் உடல்நிலை பாதிப்புகளில் இருந்து, அனைவரும்
தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என, பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

