/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆடி அமாவாசையில் ஆஞ்சநேயருக்கு வழிபாடு
/
ஆடி அமாவாசையில் ஆஞ்சநேயருக்கு வழிபாடு
ADDED : ஜூலை 25, 2025 01:09 AM
தர்மபுரி, தர்மபுரி எஸ்.வி., சாலை யில் உள்ள, அபய ஆஞ்சநேயர் கோவிலில், ஆடி அமாவாசை நாளான நேற்று, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். அதேபோல், நல்லம்பள்ளி அருகே, முத்தம்பட்டி வன பகுதியில் உள்ள, வீர ஆஞ்ச
நேயர், லளிகம் கல்யாண ஆஞ்சநேயர், தொப்பூர் கணவாய் பகுதியிலுள்ள மன்றோ குளக்கரை ஜெய வீர ஆஞ்சநேயர் உட்பட மாவட்டத்திலுள்ள, அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஆடி அமாவாசையையொட்டி, சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி - அரூர் சாலையில் கதிரிபுரத்திலுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக, வழிபாடு நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடந்தது.