ADDED : ஜூலை 21, 2026 06:09 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி; தர்மபுரி மாவட்டம், வி.கொல்லஹள்ளி ஏரிக்-கரை அருகில், நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு கிருஷ்ணாபுரம் எஸ்.எஸ்.ஐ., சரவணன் மற்றும் ஏட்டுக்கள் சிவகுரு, சதீஷ்குமார் ஆகியோர் ரோந்து சென்றனர்.
அப்போது, எதிரே சந்தேகப்படும்படி வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், அனுமதியின்றி, 2 யூனிட் நொரம்பு மண் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுனர் அன்னசாகரத்தான்கொட்டாயை சேர்ந்த திரு-மலை, 24, என்பவரை போலீசார் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
