தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 21, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி; தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்-கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்-டனர். மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் செந்-தில்குமார், மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர்கள் வினாயகம், சின்னப் பையன், மாவட்ட இணை செயலாளர் கோவிந்த-ராசு, துரைராசு, போராட்டக் குழு தலைவர் ஸ்டாலின் மணி குமார், போராட்டக் குழு செய-லாளர் ராம்ராஜ் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், ரேஷன் கடை மூலம் செயல்ப-டுத்தி வரும் தாயுமானவர் திட்டத்தை மறுபரிசீ-லனை செய்ய வேண்டும். பெரும்பாலான இடங்-களில் விற்பனையாளர்களாக மகளிர், மாற்றுத் திறனாளிகள் மற்றும், 50 வயதுக்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருவதால், இவ்வாறான பணிகளை இத்திட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு பதிலாக, ஒன்றிய அளவில் பயனாளிகளை தேர்வு செய்து வினியோகம் செய்ய அரசே வாகன வசதி ஏற்படுத்தி அதற்கான பணியாளர்களையும் நியமனம் செய்து திட்-டத்தை அமல்படுத்த வேண்டும். பணியாளர்க-ளுக்கு பணிக்கொடை, 25 லட்சம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us