/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சொத்து தகராறில் சித்தி கொலை பாலக்கோடு அருகே வாலிபர் வெறி
/
சொத்து தகராறில் சித்தி கொலை பாலக்கோடு அருகே வாலிபர் வெறி
சொத்து தகராறில் சித்தி கொலை பாலக்கோடு அருகே வாலிபர் வெறி
சொத்து தகராறில் சித்தி கொலை பாலக்கோடு அருகே வாலிபர் வெறி
ADDED : ஜன 27, 2025 03:27 AM
பாலக்கோடு: பாலக்கோடு அருகே, சொத்து தகராறில் தந்தையை, இரும்பு ராடால் மகன் தாக்க முயன்றபோது, தடுத்த சித்தியையும் தாக்கி-யதில் அவர் இறந்தார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த எண்டப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி, 65;  பாலக்கோடு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது முதல் மனைவி மாரியம்-மாளுக்கு ஜெயராஜ், 38, என்ற மகன் உள்ளார். பல ஆண்டுக்கு முன் மாரியம்மாள் ரங்கசாமியை விட்டு பிரிந்தார். இதனால் ஜோதி, 45, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு மகன் உள்ளனர். ரங்கசாமி தன் சொத்தில் ஒரு பகுதியை மாரியம்மாளுக்கு கொடுத்துள்ளார். இதை ஏற்காமல் ரங்கசாமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்-நிலையில் மகன் ஜெயராஜ், அவரின் கூட்டாளி சந்தோஷ், 36, ஆகியோருடன் ரங்கசாமி வீட்டுக்கு மாரியம்மாள் நேற்று காலை சென்றார். அவர் வசித்து வரும் வீட்டை எழுதி தரச்சொல்லி கேட்டுள்ளனர்.ரங்கசாமி மறுக்கவே, ஆத்திரமடைந்த ஜெயராஜ் மற்றும் சந்தோஷ் இரும்பு ராடால் ரங்கசாமியை தாக்கியுள்ளனர். தடுக்க வந்த ஜோதியையும் ராடால் தாக்கியதில், சம்பவ இடத்தில் அவர் பலியானார். இதையடுத்து மூன்று பேரும் தப்பி விட்டனர். பாலக்கோடு போலீசார் மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

