sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கெரசின் அளவு குறைப்பு ரேஷன் ஊழியர்கள் திணறல்

/

கெரசின் அளவு குறைப்பு ரேஷன் ஊழியர்கள் திணறல்

கெரசின் அளவு குறைப்பு ரேஷன் ஊழியர்கள் திணறல்

கெரசின் அளவு குறைப்பு ரேஷன் ஊழியர்கள் திணறல்


ADDED : ஜூலை 13, 2011 03:02 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: கடந்த மாதம் 180 கிலோ, இந்த மாதம் 100 கிலோ என, மாவட்டங்களுக்கான மண்ணெண்ணெய் வினியோகம் குறைந்து வருகிறது.

இதனால், கார்டுதாரர்களுக்கு வழங்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் திணறுகின்றனர். ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஊராட்சி பகுதியில் 3 லிட்டர் மண்ணெண்ணெய்; பேரூராட்சி, நகராட்சிகளுக்கு 5 லிட்டர்; மாநகராட்சி, மாவட்ட தலைநகரில் உள்ள நகராட்சிகளுக்கு 10 லிட்டர் வழங்கப்படுகிறது. இரண்டு காஸ் சிலிண்டர் உள்ளவர்களுக்கு மண்ணெண்ணெய் கிடையாது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு, மாநிலங்களுக்கு மண்ணெண்ணெய் அளவை குறைத்து வருகிறது. தமிழகத்திற்கு கடந்த மாதம் 1,000 கிலோ மண்ணெண்ணெய் குறைத்து வழங்கப்பட்டது. இதனால் மாவட்டங்களுக்கான அளவும் குறைந்து வருகிறது. கடந்த ஜூனில் 180 முதல் 250 கிலோ; இம்மாதம் 100 முதல் 150 கிலோ வரை, வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வினியோகிக்க முடியவில்லை. கடந்த மாதம் டோக்கன் வாங்கியவர்களுக்கு, இன்னும் வழங்கப்படவில்லை. டோக்கன் வாங்கியவர்களுக்கு முதலில் வழங்கவும், பிறகு மற்றவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலி ரேஷன்கார்டுகளை குறைத்தால் மட்டுமே, மண்ணெண்ணெய் வினியோகத்தை சீரமைக்க முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us