ADDED : ஜூலை 11, 2011 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ச்வத்தலக்குண்டு : பவானிசாகர் மண்டல ஊரக வளர்ச்சி நிறுவன பயிற்றுனர் சந்திரமோகன்,நடராஜ் தலைமையில் பயிற்சி முகாம் ஆத்தூரில் நடந்தது.
நான்காம் நாளில் வத்தலக்குண்டு ஒன்றியம், கணவாய்பட்டி ஊராட்சியில் ஆர்.ஜி. எஸ்.ஒய்., திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து நிலக்கோட்டை, ஆத்தூர்,ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் களப்பார்வை செய்தனர். இவ்வூராட்சி முழு சுகாதார இயக்கம் மூலம் உத்தமர் காந்தி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறித்து கேட்டறிந்தனர். ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி, துணை தலைவர் கணேசன், வார்டு உறுப்பினர்கள், உதவியாளர் நாச்சியப்பன் ஆகியோர் ஊராட்சியில் நடந்து வரும் பணிகள் குறித்து விளக்கினர்.