/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏலம் போகும் பதவி கலெக்டர் எச்சரிக்கை
/
ஏலம் போகும் பதவி கலெக்டர் எச்சரிக்கை
ADDED : செப் 26, 2011 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி:ஆத்தூர் ஒன்றியத்தில் பிள்ளையார்நத்தம், குட்டியபட்டி, வண்ணான்புதூர், மாதாநகர் கிராமங்களை உள்ளடக்கியது பிள்ளையார்நத்தம் ஊராட்சி.
சில நாட்களுக்கு முன், ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்படுவதாகவும், கிராமத்திற்கு 5 லட்ச ரூபாய் தர முன்வருபவர், தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் புகார் எழுந்தது. நேற்று மாலை, கலெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தினார். ''ஜனநாயக முறைப்படி தேர்தலில் பங்கேற்க வேண்டும். ஏலமுறையில் தலைவரை தேர்வு செய்ய முயற்சிப்பது சட்டவிரோதம்,'' என, அவர் எச்சரித்தார்.