/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓட்டுக்கு பணம் வாங்காதீர் தனி நபராக விழிப்புணர்வு
/
ஓட்டுக்கு பணம் வாங்காதீர் தனி நபராக விழிப்புணர்வு
ADDED : ஏப் 16, 2024 06:51 AM

நத்தம்: ஓட்டுக்கு பணம் வாங்காதீர் என்பதை வலியுறுத்தி தனிநபராக பதாகை ஏந்தியப்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வலைச்சேரிபட்டியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சரவணன். இவர் புத்தாண்டில் மதுவுக்கு இளைஞர்கள் அடிமை ஆக கூடாது , தங்கள் ஊரின் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை வழியுறுத்தி பிரசாரம் செய்வார். இதை தொடர்ந்து தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம், பொருள் வாங்க வேண்டாம். எதிர்கால 5 ஆண்டுகளை கணக்கில் கொண்டு நல்லவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகையை உடலில் கட்டிக் கொண்டு நத்தம் நகரில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

