/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஞ்சாயத்து பேச்சில் மூவருக்கு கத்திக்குத்து
/
பஞ்சாயத்து பேச்சில் மூவருக்கு கத்திக்குத்து
ADDED : மார் 14, 2025 06:09 AM
வேடசந்துார்: காளனம்பட்டியை சேர்ந்தவர் பொன்ராஜா. பூத்தாம்பட்டி அருகே டூவீலரில் சென்றபோது களனம்பட்டியை சேர்ந்த சண்முகராஜா ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது.
நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் ஆத்து மேட்டில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சண்முகராஜா சேதமான டூவீலருக்கு செலவுத்தொகை கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பொன்ராஜா சண்முகராஜாவை கத்தியால் குத்தினார். இதை தடுத்த சண்முகராஜா தம்பி கார்த்தி , கருப்புத்தேவனுாரை சேர்ந்த ராஜாவையம் குத்தினார். பொன்ராஜா தப்பினார். காயமடைந்த மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.