/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு மருத்துவமனையில் புரோக்கர்கள் தொல்லை
/
அரசு மருத்துவமனையில் புரோக்கர்கள் தொல்லை
ADDED : ஜூலை 14, 2011 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
மாவட்டதலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார்.
பொருளாளர் நாகராஜன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியம், துணை செயலாளர் ராஜேஸ் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உள், வெளி நோயாளிகளிடம் புரோக்கர்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் உள்ள தகவல் தொடுதிரையை மீண்டும் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

