ADDED : ஜூலை 23, 2011 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி தண்டாயுதபாணி கோயிலில் கலெக்டர் நாகராஜன் ஆய்வு செய்தார்.
'ரோப் கார்' வழித்தடத்தில் ஒரு கோடி 53 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் செயற்கை நீரூற்று, பூங்கா அமைத்தல், வடக்கு கிரிவலப்பாதையில் 49 லட்சம் ரூபாயில் தகவல் மையம் கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.
'ரோப் கார்' வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். வேணுகோபாலு எம்.எல்.ஏ., செயற்பொறியாளர் வேலாயுதம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருண்மணி, கோயில் இணை கமிஷனர் ராஜா, உதவி கமிஷனர் நடராஜன் உடனிருந்தனர்.