/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.பி.ஆர். கல்லுாரியில் 2கே25 போட்டிகள்
/
என்.பி.ஆர். கல்லுாரியில் 2கே25 போட்டிகள்
ADDED : பிப் 15, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் என்.பி.ஆர்.,பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் மேலாண்மைத் துறை சார்பாக மாநில அளவில் கல்லுாரிகளுக்கிடையே பைன் ஸ்ட்ரா 2கே 25 போட்டிகள் நடந்தது.
மேலாண்மைத்துறை தலைவர் வேல்முருகன் வரவேற்றார். 23 கல்லுாரிகளை சேர்ந்த 477 மாணவர்கள் கலந்து கொண்டனர். மதுரை தியாகராசர் கல்லுாரி சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.
மதுரை லேடி டோக் கல்லுாரி 2ம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு , பாராட்டுச் சான்றிதழ்களை கல்லுாரி முதல்வர் மருதுகண்ணன், கல்வி இயக்குனர் கார்த்திகைபாண்டியன் வழங்கினர். மாணவி கார்த்திகை செல்வி நன்றி கூறினார்.