ADDED : பிப் 15, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை : நத்தம் செந்துறை மல்லநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மூக்கன் 51.
இவரும் செந்துறை கோவில்பட்டியை சேர்ந்த ராசு 57 , நேற்று முன்தினம் இரவு செந்துறை டாஸ்மாக் கடைக்கு சென்று அட்டை பெட்டியாக மொத்தமாக மதுபாட்டில்கள் கேட்டுள்ளனர்.
சூப்பர்வைசர் அட்டை பெட்டியாக தரமுடியாது என கூறி உள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. செந்துறை போலீஸ் சுரேஷ்குமார் சில்லறையாக வாங்க கூறி உள்ளார். அப்போது போலீஸ்காரர் சுரேசை மூக்கன் தரப்பை சேர்ந்த சிலர் தாக்கினர்.
சுரேஷ்குமார் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
மூக்கன் 51, மாமரத்துபட்டி பொன்னர் 38, செந்துறை சக்திவேல் 41, முத்துகிருஷ்ணன் 36, அழகுராஜா 25, ராசு 57, ஆகியோரை நத்தம் - எஸ்.ஐ., தர்மர் கைது செய்தார்.