ADDED : ஏப் 04, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : எர்ரமநாயக்கன்பட்டி, வேம்பரளி, சமுத்திராபட்டி சோதனை சாவடிகளில் லோக்சபா தேர்தல் பொது மேற்பார்வையாளர் பிரபுலிங்காவலிகட்டி ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகளின் வாகனங்களையும், அவர்கள் மேற்கொள்ளும் பணிகளுக்காக பயன்படுத்தும் தினசரி பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். பறக்கும்படை வாகனங்கள் முறையாக செயல்படுகிறதா எனவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தாசில்தார் சுகந்தி, மண்டல துணை தாசில்தார் சுந்தர், தேர்தல் துணை தாசில்தார் டேனியல் பிரேம்குமார் உடனிருந்தனர்.

