/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முத்தாலம்மன் கோயில் விழாவில் -கழு மரம்
/
முத்தாலம்மன் கோயில் விழாவில் -கழு மரம்
ADDED : மே 31, 2024 06:13 AM

செந்துறை : செந்துறை அருகே குடகிப்பட்டி மணக்காட்டூர் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நடந்த கழு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கோயில் விழாவை யொட்டி மே 23 ல் சுவாமி சிலை செய்ய பிடிமண் எடுக்க நேற்று முன்தினம் இரவு கிராம தேவதைகளுக்கு கனி வைத்தல் நடந்தது. தொடர்ந்து முத்தாலம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் தொடங்கினர். வாணவேடிக்கைகளுடன் முத்தாலம்மனை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மின் ரதத்தில் அம்மன் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்தார். தொடர்ந்து கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கழுமரத்தில் போட்டி போட்டு ஏறி இலக்கை தொட்டனர். மாலையில் தீவட்டி பரிவாரங்கள், வாண வேடிக்கையோடு அம்மன் பூஞ்சோலை செல்தல் நடந்தது.