/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளம் தோண்டி 4 மாதம் கடந்தும் பணிகள் துவங்கல தொடர் அவதியை சந்திக்கும் மக்கள்

ADDED : மார் 03, 2025 06:30 AM

சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் குஜிலியம்பாறை ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி, ஆர்.பி., பில்லமநாயக்கன்பட்டி மூலக்கடையிலிருந்து காப்பிலியபுரம் வரை உள்ள 4 கி.மீ., தார் ரோடு புதுப்பிக்கும் பணிக்காக தேர்வு செய்யப்பட்டது. 4 மாதங்களுக்கு முன்பு ரூ.2.50 கோடி திட்ட மதிப்பில் டெண்டர் விடப்பட்டதால் டெண்டர் எடுத்தவர்கள் ரோடை புதுப்பிக்க பள்ளம் தோண்டி போட்டுள்ளனர். 4 மாதங்களாக 4 கி.மீ., துாரத்திற்கு ரோடை புதுப்பிக்காமல் தோண்டிய நிலையில் உள்ளதால் வாகனங்களில் செல்ல முடியாமல் மக்கள்மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
சிலர் தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். குஜிலியம்பாறை ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி மூலக்கடை ரோடை போல் வேடசந்துார், நிலக்கோட்டை, பழநி தாலுகாக்களிலும் சேர்த்து மொத்தம் 4 ரோடுகள் ரூ. 10 கோடி திட்ட மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. இனி வரும் காலங்களில் ஆர்.பி.ஐ., 81 என்ற ஆயில் கலந்து ரோடை போட வேண்டும் என்ற நிலையில் பயிற்சி வகுப்புகள் ஒப்பந்ததாரர்களுக்கும்,பொறியாளர்களுக்கும் இன்னும் வழங்கப்படவில்லை. ஒரு நவீன தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்ட நிலையில் அது குறித்த புரிதல், ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.