ADDED : செப் 05, 2024 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் ; ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சுபமுகூர்த்த தினங்கள் தொடங்கியுள்ள நிலையில் காய்கறிகள் விலை அதிகரித்து காணப்பட்டது.
இம்மார்க்கெட்டில் சில நாட்களாக காய்கறி வரத்து அதிகரிக்க விலை சரிவடைந்த நிலையில் தற்போது சுபமுகூர்த்த தினங்கள் தொடங்கி உள்ளதால் விலை சற்று ஏற்றம் கண்டுள்ளது.
கிலோ ரூ.5க்கு விற்ற வெண்டைக்காய் ரூ. 12 , ரூ.11 க்கு விற்ற தக்காளி ரூ.20 , ரூ.8 க்கு விற்ற பீட்ரூட் ரூ.9 , ரூ.2 க்கு விற்ற சுரைக்காய் ரூ.3 க்கு விற்பனையானது. இதே போல் சில காய்கறிகள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.