/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டோரம் வீசப்பட்ட களிமண் மூடைகள்
/
ரோட்டோரம் வீசப்பட்ட களிமண் மூடைகள்
ADDED : ஆக 18, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் , : வேடசந்துார் அருகே நெடுஞ்சாலையில் சிலர் ஏராளமான சாக்கு மூடைகளில் களிமண் போன்ற பொருட்களை வீசி சென்றனர்.
வேடசந்துார் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் காக்கா தோப்பூர் அருகே 3 இடங்களில் சாக்கு மூடைகள் கிடந்தன. இதில் களிமண் போன்ற பொருள் இருந்ததால் வெடி பொருட்களா என மக்களிடையே தகவல் பரவியது.
ரோடு மேக்கிங் மெட்டீரியல் என எழுதப்பட்ட மூடைகளில் களிமண் போன்ற பொருட்கள் இருந்தது தெரிந்தது . வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.