/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சூசையப்பர் சர்ச் திருவிழா கொடியேற்றம்
/
சூசையப்பர் சர்ச் திருவிழா கொடியேற்றம்
ADDED : மே 06, 2024 12:59 AM

செந்துறை : நத்தம் செந்துறை சூசையப்பர் சர்ச் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
முன்னதாக பாதிரியார்கள் இன்னாசிமுத்து,மரியபிரான்சிஸ் பிரிட்டோ, மைக்கேல்ராஜ்,ஆசீர் ஜான்சன், செபாஸ்டீன்அருன் ஆகியோர் கொடியேற்றினர். அப்போது கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட மழை பெய்ய வேண்டி சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. அப்போது சிறிது நேரம் லேசான மழை பொழிந்தது. இதனால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
5 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் மாலை 6:00 மணிக்கு திருப்பலியும், மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
இன்று மாலை செபஸ்தியார் வேண்டுதல் பொங்கல் வைத்தல்,இரவு செபஸ்தியார் வேண்டுதல் சப்பர பவனியும், தொடர்ந்து அன்பின் விருந்தும் நடைபெற இருக்கிறது.
நாளை மே-7 பொது பொங்கல் வைத்தல்,இரவு ஆடம்பர திருவிழா திருப்பலி, நற்கருணை பவனியும், அனைவருக்கும் அன்பின் விருந்தும்,அன்று இன்னிசை கச்சேரி நடைபெறும்.
மே 8 அதிகாலை ,மாலையிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனிதர்களின் அலங்கார ஆடம்பர சப்பர பவனியும், விவசாயம் செழிக்கவும்,மழை வேண்டி சிறப்பு தேரடி திருப்பலி நடக்கிறது.
மே 9 காலை முதல் திருவிருந்து திருப்பலியும்,அன்று மாலை நற்கருணை பவனி பழைய கோவிலிருந்து புறப்பட்டு பங்கு ஆலயத்தை வந்தடைந்து திருவிழா நிறைவு கொடியிறக்கம் நடக்கிறது.