/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இப்படி எல்லாம் நடக்குதே: ரோட்டோர கடைகளுக்கு வாடகை வசூல்: நாளடைவில் பட்டா இடமாகும் அவலம்
/
இப்படி எல்லாம் நடக்குதே: ரோட்டோர கடைகளுக்கு வாடகை வசூல்: நாளடைவில் பட்டா இடமாகும் அவலம்
இப்படி எல்லாம் நடக்குதே: ரோட்டோர கடைகளுக்கு வாடகை வசூல்: நாளடைவில் பட்டா இடமாகும் அவலம்
இப்படி எல்லாம் நடக்குதே: ரோட்டோர கடைகளுக்கு வாடகை வசூல்: நாளடைவில் பட்டா இடமாகும் அவலம்
UPDATED : ஏப் 20, 2024 06:22 AM
ADDED : ஏப் 20, 2024 05:56 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோர புறம்போக்கு இடங்களில் வியாபார கடை வண்டிகளை அமைத்து வாடகை வசூல் செய்யும் போக்கால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது.
இதோடு நாளடைவில் இக்கடைகள் பட்டா இடமாகும் அவலமும் தொடர்கிறது .
மாவட்டத்தில் ரோட்டோர வியாபார கடைகள் பெருகி வருகின்றன.
வசதியற்ற பலர் வாழ்வாதாரத்திற்காக ரோட்டோர கடைகள் அமைத்து அன்றாட பிழைப்பு நடத்தி வருகின்றனர். படித்து வேலையற்ற இளைஞர்கள் பலர் ரோட்டோர வண்டிகளில் தாங்கள் பயின்ற கேட்டரிங் படிப்பு மூலமாக சமையற்கலையில் விதவிதமான உணவுகள் சமைத்து திறமை காட்டி வருகின்றனர்.
இதனால் வேலை வாய்ப்பும், வருமான ரீதியாகவும் அவர்களுக்கு தன்னிறை ஏற்பட்டுள்ளது.
ரோட்டோர வியாபாரம் பல இடங்களில் களை கட்டுவதால் பெரிய நிறுவன கடைகள் பாதிக்கப்படுவதாகவும் பல இடங்களில் பிரச்னை எழுகிறது.
இதோடு ரோட்டோர கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் பெருகி வருகிறது. நகரின் முக்கிய இடங்களின் மையத்தில் உள்ள இந்த ரோட்டோர கடைகளை உள்ளுார் ரவுடிகளும், அரசியல் புள்ளிகளும், அதிகார மட்டத்தில் உள்ளவர்களும் பதியப்படாத பட்டா கடைகளாக்கி வாடகை வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் கிடைக்கும் வருமானத்தால் பலரும் ஆடம்பர வாழ்வில் திளைத்து வருகின்றனர்.நாளடைவில் இக்கடைகள் பட்டா இடமாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ்ஸ்டாண்ட்கள், வங்கிகள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் ரோட்டோரங்களில் செயல்படும் கடைகள் பல அதிகார பலமுடையவர்களின் கட்டுப்பாட்டில் தினவாடகை அடிப்படையில் செயல்படுவதை தடுக்க தற்போதே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

