/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றுலா செல்கிறீர்களா: வீடுகளில் நகைகள், பணத்தை வைக்காதீங்க: திருட்டை தடுக்க தேவை தகுந்த பாதுகாப்பு

ADDED : ஏப் 27, 2024 05:36 AM

மாவட்டத்தில் வசிக்கும் பொது மக்கள் கோடை விடுமுறை நாட்களுக்கு வெளியூருக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவர். அப்படி செல்வோர் வீட்டில் உள்ள விலை மதிப்பு மிக்க பொருட்களை பாதுகாப்பாக இருக்க தகுந்த ஏற்பாடுகளை செய்துவிட்டு வெளியூர் செல்ல வேண்டும்.
மாவட்டத்தில் சமீப காலமாக புறநகர் பகுதிகளில் வீடுகளில் திருடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடம், பஸ்களிலும் பிக்பாக்கெட் தொல்லை அதிகரித்துள்ளது.
குடும்பத்துடன் வெளியூர் செல்லும் நபர்கள் வீட்டில் விலைமதிப்பு மிக்க பொருட்களை வைப்பதை தவிர்க்கலாம். தங்கம் உள்ளிட்ட நகைகளை வங்கி லாக்கர்களில் பாதுகாப்பாக வைக்கலாம். அதிகளவு பணத்தையும் வீட்டில் வைப்பதை தவிர்ப்பதோடு அருகில் குடியிருக்கும் நம்பிக்கையான நபர்களை வீட்டை கண்காணித்து கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும்.
வசதி உள்ளவர்கள் வீடுகளுக்கு நம்பிக்கை உடைய காவலாளிகளை நியமிக்க வேண்டும். போலீசாருக்கும் தகவல் தர வேண்டும்.
தங்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி போதிய அளவு லைட் வசதியும் செய்து கொள்ள வேண்டும்.
இதோடு மக்களும், சந்தேகப்படும் நபர்கள் எவரேனும் சுற்றித்திரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கலாம்.
வீட்டின் வெளிப்புறம் கதவை உடைக்க பயன்படுத்தும் இரும்பு பைப், ராடு போன்ற கருவிகள் வைத்து செல்லக்கூடாது. தினமும் வரும் பால், பேப்பர் போடும் நபர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது அவசியம். அடிக்கடி கண்காணிப்பு கேமராவையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அருகில் உள்ள நபர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு வீட்டின் நிலையை கண்காணிக்க அறிவுறுத்த வேண்டும்.