ADDED : மே 18, 2024 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி : கொடைக்கானல் - வத்தலக்குண்டு ரோட்டில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் கார் மீது கவிழ்ந்தது.
பெங்களுருவை சேர்ந்தவர் ஷ்வரன் 35.குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பினார். வத்தலக்குண்டிலிருந்து வந்த சரக்கு வேனை கவுஞ்சியை சேர்ந்த அருள் பாண்டி 24 , ஒட்டினார். மூலையாறு அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் கார் மீது கவிழ்ந்தது. காரில் இருந்த மூவரும் தப்பினர். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

