/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதியவர் கழுத்தை அறுத்து கொள்ளை முயற்சி
/
முதியவர் கழுத்தை அறுத்து கொள்ளை முயற்சி
ADDED : ஆக 22, 2024 03:35 AM
கோபால்பட்டி: -கோபால்பட்டி விளக்கு ரோடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கழுத்தில் கத்தியால் அறுத்து கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார் தேடுகின்றனர்.
கோபால்பட்டி விளக்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி 35. தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது தந்தை அய்யாகாளை 65. மனைவி இறந்த நிலையில் மகள் சாந்தியுடன் வசித்து வருகிறார்.
அய்யாகாளை வீட்டில் இருந்தபோது ஒருவர் கத்தியுடன் உள்ளே நுழைந்து கொள்ளையடிக்க முயன்றார்.
தடுக்க முயன்ற அய்யாகாளையை கத்தியால் கழுத்து என பல இடங்களில் அறுத்தார். அதன்பின் அந்த நபர் தப்பினார். அய்யாகாளை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சாணார்பட்டி எஸ்.ஐ., ராஜேந்திரன் தேடிவருகிறார்.