/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்டம்
/
பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்டம்
ADDED : ஆக 25, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்ஸவ திருவிழாவில் தேரோட்டம் நடந்தது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா ஆக.15 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆக. 21ல் ஸ்ரீதேவி,பூதேவி, அகோபில வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்,இரவு பவளக்கால் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு , ஆக. 22ல் பாரிவேட்டை, நேற்று (ஆக.,23 ) காலை தேரோட்டம் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.ஆக., 24ல் கொடியிறக்கம் , ஆக. 25.,ல் விடையாற்றி உற்ஸவம் நடைபெறுகிறது.