/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆயக்குடியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை
/
ஆயக்குடியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை
ADDED : செப் 12, 2024 05:16 AM
ஆயக்குடி: பழநி ஆயக்குடியில் பா.ஜ.,உறுப்பினர் சேர்க்கையை மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் பார்வையிட்டார்.
அப்பகுதியில் வீடு வீடாக சென்று மத்திய அரசு கொண்டு வந்ததுள்ள திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கினார். கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
அதன் பின் அவர் கூறியதாவது : விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது திரைப்படத்தை வெளியிட்டு கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் நடிகரும் த.வெ.க., கட்சியின் தலைவருமான விஜய்க்கு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்து சொல்ல தெரியவில்லை. தனிப்பட்ட நபராக இருந்தால் வாழ்த்து சொல்வது அவர் விருப்பம்.
ஆனால் ஒரு கட்சியின் தலைவரான பின் வாழ்த்து தெரிவிப்பது வேண்டும் என்பதை அவர் உணர வேண்டும் என்றார்.திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், கிழக்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ் கலந்து கொண்டனர்.