/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கலெக்டர் அலுவலகம் முற்றுகை; தர்ணா
/
கலெக்டர் அலுவலகம் முற்றுகை; தர்ணா
ADDED : மார் 14, 2025 05:54 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் - வத்தலகுண்டு ரோட்டில் உள்ள பித்தளைப்பட்டியில் மேம்பாலம் ,4 வழிச்சாலையாக மாற்ற 10 ஆண்டாக கோரிக்கை விடுத்தும் பரிசீலனை செய்யாததால் கலெக்டர் அலுவலகத்தை 200க்கு மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர்
திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டி, வக்கம்பட்டி, அனுமந்தராயன் கோட்டை, வீரக்கல் பகுதிகள் திண்டுக்கல் வத்தலகுண்டு - குமுளி 2 வழிச்சாலை ரோட்டில் அமைந்துள்ளன. இதனை நான்கு வழிச்சாலையாகவும், பித்தளைபட்டி அருகே மேம்பாலம் அமைக்கவும் 10 ஆண்டாக மக்கள் கோரி வருகின்றனர்.
மேம்பாலம், 4 வழிச்சாலையாக கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200 க்கு மேற்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் இல்லாததால் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆத்திரமடைந்த மக்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். போலீஸார் ,அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. இதன் பின் வந்த கலெக்டர் சரவணனிடம் கோரிக்கை குறித்து எடுத்துரைத்தனர். அவர் அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார்.