ADDED : மே 31, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் மாநகர காங்.,சார்பில் கருப்பு கொடி காட்டுவதற்காக கன்னியாகுமரி செல்ல காங்.,மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே திரண்டனர்.
வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி,எஸ்.ஐ.,ராஜகோபால் தலைமையிலான போலீசார் மாவட்ட துணைத்தலைவர் கார்த்திக்,பகுதி செயலாளர்கள் அப்பாஸ் மந்திரி,மதுரை வீரன்,உதயகுமார்,பரமசிவம்,மாவட்ட இளைஞர் காங்.,தலைவர் முகமது அலியார் உட்பட 27 பேரை கைது செய்தனர்.