/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது திணறிய அதிகாரிகள் கவுன்சிலர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது திணறிய ஒன்றிய அதிகாரிகள்

ADDED : ஆக 28, 2024 06:10 AM
நிலக்கோட்டை : நிலக்கோட்டை ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது அதிகாரிகள் திணறினர்.
நிலக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., பத்மாவதி வரவேற்றார்.
கவுன்சிலர்கள் விவாதம்:
கணேசன் ( சுயேட்சை): ஐந்து ஆண்டு கால வரவு செலவு விபரம்,
2020-ல் இருந்து செலவு செய்த திட்டப்பணிகள் விபரங்களை தெரிவிக்க வேண்டும். கிராமங்களில் சேதமான பழைய கட்டடங்களை இடிக்கும் போது ஒன்றிய கவுன்சிலரிடம் தெரிவிக்காதது ஏன்.பி.டி.ஓ., தன்னிச்சையாக செயல்படுகிறார்.
துணை த்தலைவர்:தி.மு.க. , ஒன்றிய செயலாளர் சொல்லிதான் பி.டி.ஓ., சேதமான கட்டடங்களை இடித்தார்.
ராஜதுரை (சுயேச்சை): பி.டி.ஓ., விடம் நான் கேட்டபோதும் ஒன்றிய செயலாளர்தான் கட்டடத்தை இடிக்க சொன்னதாக தெரிவித்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அப்படி யாரும் ஒன்றிய செயலாளர் இருக்கிறார்களா.
கணேசன் ( சுயேட்சை): அடுத்த கூட்டத்திற்கு கலெக்டர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். முறைகேடு செய்த நத்தம் ஒன்றியம் மீது நடவடிக்கை எடுத்தது போல் நிலக்கோட்டையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்றபோதும் எதுவும் பேசாது அமைதி காத்தனர். சுயேட்சை கவுன்சிலர்கள் கணேசன், ராஜதுரை கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர்.