/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏப்.27 ல் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
/
ஏப்.27 ல் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
ADDED : ஏப் 25, 2024 04:41 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அணிக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 14, 16 வயது பிரிவில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
14 வயது பிரிவுக்கான அணியில் சேர 2010 செப்.1 பின் பிறந்தவர்களாகவும், 16 வயது பிரிவுக்கான அணியில் சேர 2008 செப்.1 பின் பிறந்திருத்தல் அவசியமாகும்.
தகுதி உடையோர் பிறப்பு சான்றிதழுடன் விளையாட்டு உபகரணங்கள், வெள்ளை சீருடையில் ஏப்.27 ல் சீலப்பாடி பிரசித்தி வித்யோதயா பள்ளியில் நடக்க உள்ள வீரர்கள் தேர்வில் பங்கேற்கலாம்.
14 வயது பிரிவில் பங்கேற்போர் காலை 8:00 மணி, 16 வயது பிரிவினர் மாலை 3:00 மணிக்கு வர வேண்டும். விபரங்களுக்கு 79042 11151, 98428 77275ல் தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.

