/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்
/
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்
ADDED : செப் 13, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் சிறப்பு முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., கிஷன் குமார் தலைமை வகித்தார். அடையாள அட்டை, உதவித்தொகை , இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 80 க்கு மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.
25 பேருக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் சாமிநாதன், சமூக நலத்துறை தாசில்தார் மங்களபாண்டியன், மண்டல துணை தாசில்தார் பிரபு சிவசங்கர், வருவாய் ஆய்வாளர் திலகவதி, கிராம நிர்வாக அலுவலர் பாபு ஹரிகிருஷ்ணன், கிராம உதவியாளர் விஜய பாஸ்கரன் கலந்து கொண்டனர்.

