/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விலை உயர்ந்த கொடைக்கானல் மலைப்பூண்டு
/
விலை உயர்ந்த கொடைக்கானல் மலைப்பூண்டு
ADDED : செப் 07, 2024 07:11 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைச்சல் பாதிப்பால் மலைப்பூண்டின் விலை உயர்வடைந்துள்ளது.
மலைப்பகுதிகளான மன்னவனுார், பூண்டி, கிளாவரை, கவுஞ்சி , வில்பட்டி,வடகவுஞ்சி கூக்காலில் ஊட்டி ரக மலைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. தொடர்மழை, வெயில் என சீதோஷ்ண நிலை மாற்றத்தால் உற்பத்தி திறன் பாதித்தது. ம வனவிலங்குகள் பூண்டு பயிரை சேதப்படுத்தியது உள்ளிட்டவற்றால் 60 சதவீதம் விளைச்சல் பாதித்தது. 2023ல் கிலோ ரூ.150 முதல் 350 வரை விற்ற பூண்டு தற்போது கிலோ ரூ. 220 முதல் 550 வரை விற்கிறது. கொடைக்கானல் ரக மலைப்பூண்டு கிலோ ரூ.550 முதல் 650 வரை விற்கப்படுகிறது . விளைச்சல் பாதிப்பால் விலை உயர்வு விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது .