/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழக கால்பந்து அணி வீரர்களுக்கு வழியனுப்பும் விழா
/
தமிழக கால்பந்து அணி வீரர்களுக்கு வழியனுப்பும் விழா
தமிழக கால்பந்து அணி வீரர்களுக்கு வழியனுப்பும் விழா
தமிழக கால்பந்து அணி வீரர்களுக்கு வழியனுப்பும் விழா
ADDED : செப் 03, 2024 04:36 AM

திண்டுக்கல் : அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பாக தேசிய அளவிலான சப்-ஜீனியர் மகளிருக்கான கால்பந்து போட்டிகள் கோல்கட்டா பெறுங்காம்பூர் மாவட்ட விளையாட்டரங்கில் செப். 11 வரை நடக்கிறது.
இதற்கான தமிழக சப்-ஜீனியர் மகளிர் கால்பந்து அணிக்கான வீராங்கனைகள் தேர்வு ஆக.8,9ல் திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரியில், தமிழ்நாடு கால்பந்து கழக நிர்வாக குழு தலைவர் ராஜன், நிர்வாக குழு உறுப்பினர் பசீர் அகமது, திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் ஏற்பாட்டில் நடந்தது.180 வீராங்கனைகள் பங்கேற்றதில் 40 வீராங்கனைகள் தேர்வாகினர். அவர்களுக்கு திண்டுக்கல்லில் உள்ள எஸ்.எஸ்.எம்., கல்லுாரியில் ஆக.18ல் பயிற்சி முகாம் நடந்தது.இதில் தமிழக சப்-ஜீனியர் மகளிர் கால்பந்து அணிக்காக 22 விராங்கனைகள் தேர்வாகினர். இதன் அணிதிண்டுக்கல்லிலிருந்து கோல்கட்டா சென்றது.
இவர்களுக்கு சீருடை வழங்கி வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமையில் நடந்தது. ஐ.எப்.எஸ்., அதிகாரி காஞ்சனா, மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, ஜி.டி.என்., கலைக்கல்லுாரி நிறுவனர் ரெத்தினம், துணைத்தலைவர் ரமேஷ் பட்டேல் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கால்பந்து கழக நிர்வாக குழு உறுப்பினர் பசீர் அகமது, உடற்கல்வி இயக்குனர் ஜெயகுமார் பங்கேற்றனர்.